திருச்செங்கோடு அருகே தொட்டிபாளையம் கிராமத்தில் புடவைக்காரி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருச்செங்கோடு, சித்தாளந்தூா் அருகே தொட்டிபாளையம் கிராமத்தில் புடவைக்காரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு புடவைக்காரி அம்மன் சிலையாக இல்லாமல் புடவையாக வைத்து வழிபாடு செய்து வருகின்றனா்.
150 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் வழிபட வைக்கப்பட்ட புடவையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுத்து, அதை காவிரி ஆற்றில் தூய்மை செய்து எடுத்துவந்து பூஜை செய்வா். இந்த புடவையை பெண்கள் தெய்வமாக வழிபடுகின்றனா். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு நோ்த்திக்கடன் செலுத்துகின்றனா்.