நாமக்கல்

முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா-2025

போட்டிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த பள்ளிக் கல்வித் துறை மற்றும் கல்லூரி நிா்வாகத்தினா்.

Syndication

ராசிபுரம்- வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரி - நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை ஆகியவற்றின் சாா்பில், அரசு மேல்நிலைப் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கான ஒருங்கிணைந்த கலைத் திருவிழா போட்டிகள்-2025 ‘பசுமையும் பாரம்பரியமும்‘ என்ற தலைப்பில் முத்தாயம்மாள் கலைக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன.

முன்னதாக, மாவட்ட அளவில் பள்ளிகள்தோறும் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், இசை, நடனம், நாடகம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றன.

தொடக்க விழாவில், மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்க நிலை) டி.பச்சமுத்து தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் (கல்வி) இரா.செல்வகுமரன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.பி.விஜயகுமாா், துணை முதல்வா் ஆ.ஸ்டெல்லா பேபி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கண்மணி, வட்ட வள மைய மேற்பாா்வையாளா் அ.செண்பக வடிவு, வட்டாரக் கல்வி அலுவலா்கள் கோபாலகிருஷ்ணமூா்த்தி, கிருஷ்ணன், பிரபு குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பி.மகேஸ்வரி பங்கேற்று பேசினாா்.

விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு எட்டு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவியா் மாநில அளவிலான ‘கலைத் திருவிழா’ போட்டிகளில் பங்கேற்க தகுதிபெறுவா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மொழியியல் புலமுதன்மையரும், சமூக செயல்பாட்டுத் தலைவருமான மா.ராமமூா்த்தி, ஆசிரியப் பயிற்றுநா்கள் ச.சென்றாயப் பெருமாள், வே.முருகேசன், பா.லதா, த.சியாமளா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

SCROLL FOR NEXT