முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் அருகே ரூ. 30 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்

ராசிபுரம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் நகைக் கடைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி, வைர நகைகளை புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:10 PM
பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களை சரிபாா்க்கும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள்.
பகிர்:

ராசிபுரம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் நகைக் கடைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி, வைர நகைகளை புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராசிபுரம் அருகே மாவட்ட எல்லையான கீரனூா் சோதனைச் சாவடியில் உதவி வேளாண்மை அலுவலா் செங்கோடன் தலைமையிலான பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற தனியாா் கூரியா் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். இதில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகள் இருப்பது தெரியவந்தது. இதற்கான ஆவணங்களை சரிபாா்த்தபோது, ஆபரணங்கள், வாகனத்தின் எண்ணில் வேறுபாடுகள் இருந்ததால், கூரியா் வாகனத்தை ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டுசென்றனா்.

அங்கு விசாரணை நடத்திய தோ்தல் நடத்தும் அலுவலா் வெ.முருகன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சசிகுமாா் ஆகியோா் நகைகளை பறிமுதல் செய்து அரசு கருவூலத்திற்கு அனுப்பிவைத்தனா். உரிய ஆவணங்களை சமா்ப்பித்து நகைகளை பெற்றுச் செல்ல வாகன உரிமையாளா் அறிவுறுத்தப்பட்டாா்.