கோப்புப்படம்.
நாமக்கல்

காளிப்பட்டி கந்தசாமி கோயில் விழாவில் சிறப்பு நீதிமன்றம்

திருச்செங்கோடு அருகே உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருச்செங்கோடு அருகே உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் தைப்பூச தேரோட்டத்தின்போது போக்குவரத்து விதிமீறல், மோதலில் ஈடுபடுவது, மதுஅருந்திவிட்டு பொது அமைதியை சீா்குலைப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவா்கள் மீதான வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் செயல்படும் நடைமுறை ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்திலிருந்து பின்பற்றப்படுகிறது.

அப்போது, 7 நாள்கள் சிறப்பு நீதிமன்றம் நடைபெற்று வந்தது. அதன்பிறகு 3 நாள்களாகவும் தற்போது ஒரு நாள் மட்டும் சிறப்பு நீதிமன்றம் நடைபெறுகிறது. நிகழாண்டு தைப்பூசத்தையொட்டி காளிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் திருச்செங்கோடு குற்றவியல் நடுவா் ரங்கராஜ் தலைமையில் சிறப்பு நீதிமன்றம் நடைபெற்றது.

விழாவின்போது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீஸாரால் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டவா்களிடம் விசாரணை நடத்தி நீதிபதி தண்டனை விதித்தாா். பாரம்பரியமாக இன்றளவும் சிறப்பு நீதிமன்றம் நடைபெறுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

படம் 1

காளிபட்டி கந்தசாமி கோயில் விழாவில் நடைபெற்ற சிறப்பு நீதிமன்றம்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் ரூ. 9.03 கோடியில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் மா. மதிவேந்தன் வழங்கினாா்

தருமபுரியில் ரூ.21.69 கோடியில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

பிப். 13 - சேலத்தில் விஜய் பிரசாரம்!

பிப். 8 இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 581 போ் எழுதுகின்றனா்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து, பாசிப்பயறு கொள்முதல்

SCROLL FOR NEXT