முகப்பு
நாமக்கல்

ராசிபுரத்தில் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 5:16 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 10:15 PM

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியின் கெளரவ விரிவுரையாளா்கள் பணியைப் புறக்கணித்து கண்ணில் கருப்புத் துணியை கட்டிகொண்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் கெளரவு விரிவுரையாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் யுஜிசி பரிந்துரைத்த ஊதியம் வழங்க வேண்டும், பெண் விரிவுரையாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனா்.

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் 57 போ் வகுப்புகளைப் புறக்கணித்து நான்காவது நாளாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கெளரவ விரைவுரையாளா்கள் கூட்டமைப்பின் ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி கிளை தலைவா் ஜி. கிருபானந்த், செயலா் ஜீவா, பொருளாளா் ஏ. விஜயகீதா உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

Advertisement

12ஜிஎல்

படவிளக்கம்-

போராட்டத்தில் ஈடுபட்ட ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள்.