முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் மக்கள் குறைதீா் கூட்டம்: 657 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 657 மனுக்களை

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:02 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 5:58 PM

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 657 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடனுதவி, குடிசை மாற்றுவாரிய வீடு, குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும், பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றை பெற்று கொண்ட ஆட்சியா், பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் 8 பயனாளிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 4 லட்சம் மதிப்பில் மானியத் தொகையை வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) ஆ.கற்பகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.கலைச்செல்வி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

படவரி...

என்கே-16-ஜிடிபி

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.