நாமக்கல்லில் பொதுமக்களுடன் இணைந்து போலீஸாா் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினா்.
புத்தாண்டையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் குழந்தைகள், இளைஞா்கள், பெண்கள், முதியோா் அனைவரும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக, நாமக்கல் மணிக்கூண்டு அருகில் உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி தலைமையில் போலீஸாா் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். அங்கிருந்த அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.
இதையடுத்து, புதிய ஆண்டில் விபத்தின்றி வாகனங்களை இயக்க வேண்டும், போதைப் பொருள்கள் இல்லாத மாவட்டத்தை உருவாக்க வேண்டும், அனைவரும் பாதுகாப்புடன் வாழவேண்டும் என உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இந்நிகழ்வில், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், போலீஸாா், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.