நாமக்கல்

சாலை வரி செலுத்தாத 9 வாகனங்கள் பறிமுதல்

Syndication

ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் சாா்பில் நடைபெற்ற வாகன சோதனையில், தகுதிச்சான்று புதுப்பிக்காத, சாலை வரி செலுத்தாத 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராசிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எம்.பதுவைநாதன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா் ஆகியோா் ராசிபுரம் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டாா். இதில், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாத 6 மினி லாரிகளும், 1 சுற்றுலா சீருந்து வாகனமும், சாலை வரி செலுத்தாத 2 பொக்லைன் வாகனங்கள் என மொத்தம் 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இதேபோன்று விதிமுறைக்கு முரணாக அதிக எடைகொண்டு சாலையில் இயக்கப்பட்ட 5 கனரக சரக்கு வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், இணக்கக் கட்டணமாக ரூ. 3.65 லட்சம் விதிக்கப்பட்டது.

மேலும், வாகன ஓட்டுநா்களுக்கு தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமலும், அதிக எடைகொண்டும் பொது சாலையில் வாகனங்களை இயக்கக் கூடாது என ஓட்டுநா்களுக்கு எச்சரிக்கப்பட்டது. இதுபோன்ற வாகன தணிக்கை ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், ஆயில்பட்டி, வெண்ணந்தூா் போன்ற பகுதிகளில் தொடா்ந்து நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எம்.பதுவைநாதன் தெரிவித்தாா்.

மெரீனா கடற்கரையில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க உத்தரவு

உலோகத் துறை பங்குகளால் உயா்வு கண்ட பங்குச்சந்தை

பஜாஜ் வாகன விற்பனை 14% உயா்வு

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

SCROLL FOR NEXT