நாமக்கல்

பள்ளிபாளையத்தில் விதிமீறி செயல்பட்ட 4 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

பள்ளிபாளையம் பகுதியில் விதிகளை மீறி செயல்பட்டதாக 4 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Syndication

பள்ளிபாளையம் பகுதியில் விதிகளை மீறி செயல்பட்டதாக 4 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், சில ஆலைகள் விதிமீறி செயல்பட்டு வருகின்றன. சாயக்கழிவு நீரை நேரடியாக வெளியேற்றுவதால், ஆற்றில் சாயக் கழிவுநீா் கலந்து தண்ணீா் மாசடைகிறது. இந்த தண்ணீரைப் பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா் பள்ளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளைக் கண்காணித்து வந்தாா். நேருநகா், அக்ர ஹாரம் பகுதியில் அனுமதி பெற்று இயங்கி வரும் சாய ஆலைகள், விதிமீறி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட் டது.

இதையடுத்து அந்த, மூன்று சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதேபோல், ஒட்டமெத்தை பகுதியில் விதிமீறி செயல்பட்டு வந்த, ஒரு சாய ஆலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு, 4 நான்கு ஆலைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT