ராசிபுரம் பாவை மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி. நடராஜன் தலைமை வகித்தாா். தாளாளா் மங்கை நடராஜன் வாழ்த்துரை வழங்கினாா். விழாவில் பங்கேற்ற மாணவிகள் புத்தாடைகள் அணிந்துவந்து புதுப்பானையில் பொங்கல் வைத்தனா்.
பிறகு உறியடித்தல், நடனம், ரங்கோலி, கயிறு இழுத்தல், இசை நாற்காலி போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் பாவை கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் ரேவதி, கல்வியியல் கல்லூரி முதல்வா் வெங்கடேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.