நாமக்கல்

ஆட்சியா் அலுவலக பூங்காவில் தூய்மைப் பணி

நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா தூய்மைப்படுத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா தூய்மைப்படுத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் இருபுறமும் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் வகையில் பூங்கா உள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால், புல், பூண்டு முளைத்தும், புதா்கள் நிறைந்தும் பூங்கா காட்சியளித்தது. அதுமட்டுமின்றி, ஆட்சியா் அலுவலகம் வரும் மக்கள் இயற்கை உபாதை கழிக்கும் இடமாகவும் பூங்காவை மாற்றியிருந்தனா்.

குடியரசு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டும், பூங்காவை அனைவரும் பயன்படுத்தும் வகையிலும், பரமத்தி வேலூா், பொத்தனூா், பாண்டமங்கலம், வெங்கரை பேரூராட்சிகளைச் சாா்ந்த தூய்மைப் பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பூங்கா பராமரிப்பு பணிகளை புதன்கிழமை மேற்கொண்டனா்.

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

SCROLL FOR NEXT