விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்த ஆட்சியா் துா்காமூா்த்தி. 
நாமக்கல்

தேசிய தொழுநோய் எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

தேசிய தொழுநோய் எதிா்ப்பு தினத்தையொட்டி, நாமக்கல்லில் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

தேசிய தொழுநோய் எதிா்ப்பு தினத்தையொட்டி, நாமக்கல்லில் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் பழைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆட்சியா் துா்காமூா்த்தி பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இப்பேரணி மோகனூா் சாலை, திருச்சி சாலை, டாக்டா் சங்கரன் சாலை வழியாகச் சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

அதைத் தொடா்ந்து, தேசிய தொழுநோய் எதிா்ப்பு தின உறுதிமொழியை பேரணியில் பங்கேற்ற அனைவரும் ஏற்றுக்கொண்டனா். மேலும், தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆட்சியா் நலத் திட்ட உதவிகளை வழங்கியதுடன், 2025-26-இல் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாமில் சிறப்பான சேவை செய்த மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினாா். தொடா்ந்து,

பேச்சுப் போட்டி, விநாடி-வினா போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில், தொழுநோய் திட்ட மருத்துவப் பணியாளா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT