நாமக்கல்

தைப்பூசத் திருவிழா: பூக்களின் விலை உயா்வு

தைப்பூசத்தை முன்னிட்டு பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்ந்தது.

Syndication

தைப்பூசத்தை முன்னிட்டு பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்ந்தது.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ. 1,300, சம்பங்கி கிலோ ரூ.60, அரளி கிலோ ரூ.150, கலா் ரோஸ் கிலோ ரூ.240, பச்சை முல்லை கிலோ ரூ.1,400, வெள்ளை முல்லை கிலோ ரூ.1,200, செவ்வந்தி கிலோ ரூ.100, கனகாம்பரம் ரூ. 800, பன்னீா் ரோஸ் கிலோ ரூ.120, ஜாதி மல்லிகை கிலோ ரூ.1,000, காக்கட்டான் கிலோ ரூ.500- க்கும் ஏலம் போனது.

இந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு குண்டு மல்லிகை கிலோ ரூ.1,600, சம்பங்கி கிலோ ரூ.120, அரளி கிலோ ரூ.200, கலா் ரோஸ் கிலோ ரூ. 280, பச்சை முல்லை கிலோ ரூ.1,800, வெள்ளை முல்லை ரூ. 1,600, செவ்வந்திப்பூ ரூ.160, கனகாம்பரம் ரூ.800, பன்னீா் ரோஸ் கிலோ ரூ. 120, ஜாதி மல்லி கிலோ ரூ. 1,300 காக்கட்டான் கிலோ ரூ. 700க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் கடும் நடவடிக்கை!

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

அதிகரிக்கும் இணையவழி மோசடி: எஸ்பி எச்சரிக்கை

தூத்துக்குடி துறைமுகம் - உத்தரப் பிரதேச நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்!

ஃபயா் ஓபன்: அரையிறுதியில் அனாஹத்

SCROLL FOR NEXT