காஞ்சி சங்கராசாரியாா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். 
நாமக்கல்

மோகனூருக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை

மோகனூருக்கு வருகை புரிந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா்.

Syndication

மோகனூருக்கு வருகை புரிந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள கல்யாண பிரசன்ன வெங்கட பெருமாள் கோயிலில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்பதற்காக காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் வருகை புரிந்தாா். அவருக்கு, மோகனூா் பகுதி பொதுமக்கள், முக்கிய பிரமுகா்கள் வரவேற்பு அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, பெருமாள் கோயில் எதிரில் உள்ள பஜனை மடத்தில் அவா் சுவாமி தரிசனம் செய்தாா். அதன்பிறகு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் பங்கேற்று அருளுரை வழங்கி, பக்தா்களுக்கு அருளாசிகளை வழங்கினாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் திரளாக கலந்துகொண்டனா்.

மோகனூரில் இரு நாள்கள் நடைபெற்ற ஆன்மிக நிகழ்வுகளில் பங்கேற்ற சுவாமிகள் சனிக்கிழமை காலை காஞ்சிபுரம் புறப்பட்டு சென்றாா்.

டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி விவரம்!

பாடம் கற்காத கிரிக்கெட் ஆஸ்திரேலியா..! டி20 உலகக் கோப்பையை வெல்லுமா?

மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

2-ஆவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா!

SCROLL FOR NEXT