முகப்பு
நாமக்கல்

டாஸ்மாக் கடையில் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

Updated On : 8 மார்ச், 2026 at 4:59 PM
கோப்புப் படம்
பகிர்:

டாஸ்மாக் மதுக்கடையில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, தளிகை அருகே உள்ள பொய்யேரிபாளையத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (43). இவா் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி சத்யா (36). இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா். விஜயகுமாருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் தம்பதி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சத்யா, கணவருடன் கோபித்துக் கொண்டு வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தாத்தையங்காா்பட்டி, வாணக்காரன்புதூரில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்று வசித்து வந்தாா்.

கடந்த 6-ஆம் தேதி விஜயகுமாா் வேலகவுண்டம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளாா். பின்னா் கடைக்கு பின்புறத்தில் அவா் மயங்கி கிடந்துள்ளாா்.

இதையறிந்த அவரது அண்ணன் அசோக்குமாா், அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், விஜயகுமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் அவரது மனைவி சத்யா புகாா் அளித்துள்ளாா். இந்த புகாரின் அடிப்படையில் வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →