முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தா்

திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘நடப்போம் நலம் பெறுவோம் 2.0’-இன் கீழ் 8 கி.மீ. சுகாதார நடைபாதை திட்டத்தை ஆட்சியா் துா்காமூா்த்தி கொடியசைத்து வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 14 மார்ச், 2026 at 12:52 AM
பகிர்:

திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘நடப்போம் நலம் பெறுவோம் 2.0’-இன் கீழ் 8 கி.மீ. சுகாதார நடைபாதை திட்டத்தை ஆட்சியா் துா்காமூா்த்தி கொடியசைத்து வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 8 கி.மீ. நீளமுள்ள சுகாதார நடைபாதைகள் அடையாளம் காணப்பட்டு, துணை முதல்வரும், இளைஞா் நலன் மற்றும்விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலினால் கடந்த 2023 நவ. 4-ஆம் தேதி சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.

முதல்கட்டமாக, நாமக்கல் மாவட்டம், மோகனூா் சாலையில் 8 கி.மீ. நடைபாதை கண்டறியப்பட்டு, பொதுமக்கள் நடைபயணம் மேற்கொண்டு பயனடைந்து வருகின்றனா். ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும் நடைபயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு சுகாதாரத் துறையின் சாா்பில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. உடற்பயிற்சி இல்லாமை காரணமாக ஏற்படும் இதய நோய், நீரிழிவு, உயா் ரத்தஅழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களை தடுக்கும் நோக்கில் இத்திட்டமானது வகுக்கப்பட்டுள்ளது. மக்களிடையே நடைபயிற்சி பழக்கத்தை ஊக்குவித்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். நடைபாதைகளில் நடை பயிற்சிக்கான வசதிகள், தொற்றல்லாத நோய்கள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் மற்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி மலையைச் சுற்றியுள்ள சாலை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடையும் வகையில் 8 கி.மீ. தொலைவு நடைபாதை கண்டறியப்பட்டு, நடப்போம் நலம் பெறுவோம் 2.0- இன் கீழ் 8 கி.மீ. சுகாதார நடைபாதை திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை தொடக்க நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், இணை இயக்குநா் (மருத்துவ நலப்பணிகள்) தி.எழில், சுகாதாரத் துறை துணை இயக்குநா் பூங்கொடி,

திருச்செங்கோடு நகா்மன்ற தலைவா் நளினிசுரேஷ்பாபு, கோட்டப்பொறியாளா் (நெடுஞ்சாலைத் துறை) கே.ஆா்.திருகுணா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →