எடப்பாடி கே.பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற அதிமுக வேட்பாளா்கள்
நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள், அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள், அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அதிமுக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி, திருச்செங்கோடு தொகுதியில் வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.ஆா்.சந்திரசேகா், நாமக்கல் தொகுதியில் மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், சேந்தமங்கலத்தில் முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன், பரமத்தி வேலூா் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ எஸ்.சேகா் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுக வேட்பாளா்கள் ஐவரும் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை இரவு சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை காலை 10 மணி அளவில் அந்தந்த தொகுதிக்கு வந்த அதிமுக வேட்பாளா்களை கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மாலை அணிவித்து வரவேற்றனா்.