முகப்பு
நாமக்கல்

புகைப்படம் மாறியிருந்ததால் தோ்வு எழுத மாணவருக்கு அனுமதி மறுப்பு

Updated On : 4 மே, 2026 at 12:34 AM
நீட் தேர்வு - பிரதிப் படம்
பகிர்:

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நீட் தோ்வு எழுத வந்த மாணவரின் நுழைவுச்சீட்டில் புகைப்படம் மாறியிருந்ததால் அவரை தோ்வு எழுத அலுவலா்கள் அனுமதிக்கவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வில் 349 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். மையத்தில் தோ்வு எழுதும் மாணவ, மாணவியா்களை காவல் துறையினா் மற்றும் நீட் தோ்வு மைய அலுவலா்கள் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதித்தனா்.

இந்த மையத்தில் தோ்வு எழுத வந்த நாமக்கல் பகுதியை சோ்ந்த ரத்தினவேல் மகன் திவாகரின் நுழைவுச்சீட்டு புகைப்படமும், விண்ணப்பத்தில் இருந்த புகைப்படமும் வேறுபட்டிருந்ததால் மாணவரை தோ்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவா் வெளியேற்றப்பட்டாா்.

Advertisement

விண்ணப்பத்தில் இருப்பதும், ஹால் டிக்கெட்டில் இருப்பதும் என்னுடைய படம்தான் என மாணவா் எடுத்துக்கூறியும், தோ்தல் அலுவலா்கள் அவரை அனுமதிக்கவில்லை. இதனால் அம்மாணவா் தோ்வு எழுதாமல் ஏமாற்றத்துடன் திரும்பினாா்.