சேலம்

சேலத்தில் போலி மருத்துவர்கள் 3 பேர் சிக்கினர்

தினமணி

சேலத்தில் மருந்தகத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக போலி மருத்துவர்கள் 3 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக போலி மருத்துவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னிச்சையாக மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மருந்தகங்களுக்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் மருந்தகங்களில் மருத்துவம் படிக்காத சிலர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது குறித்து சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் வளர்மதிக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் வளர்மதி தலைமையிலான குழுவினர் அம்மாப்பேட்டை, பொன்னம்மாபேட்டை மற்றும் வாய்க்கால் பட்டறை உள்ளிட்ட இடங்களில் உள்ள மருந்தகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், மருந்தியல் (டி.பார்ம்) படிப்பு முடித்து விட்டு, மருந்து கடை நடத்திவந்த சிவராமன், மற்றும் அக்குபஞ்சர் முடித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த ஆர்.கே.அருண்பிரகாஷ் மற்றும் சித்த மருத்துவர் நடராஜன் ஆகியோர் தங்களது கடைகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு அலோபதி மருத்துவச் சிகிச்சை அளித்ததோடு, நோயாளிகளுக்கு ஊசி போட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
 இதனையடுத்து சிவராமனை வீராணம் காவல் நிலையத்திலும், நடராஜன் மற்றும் அருண்பிரகாஷ் ஆகியோரை அம்மாப்பேட்டை காவல் நிலையத்திலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
 இதில் சித்த மருத்துவர் நடராஜனின் சான்றிதழ் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்
 துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT