சேலம்

சங்ககிரியில் வட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்

தினமணி

சங்ககிரி கல்வி மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றன. 
சங்ககிரி கல்வி மாவட்ட அளவில்  சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியில் சங்ககிரி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர் ஆகிய வட்டங்களில் உள்ள  அரசு, தனியார் 50 பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில் மேட்டூர் மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து சங்ககிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,  நங்கவள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சேலம் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் சி.செல்வராஜ் போட்டிகளை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.  சங்ககிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்.ராமசாமி,  ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ரமணன், வடுகப்பட்டி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பி.பாலசுப்ரமணியம்,  ஆசிரியர்கள் எஸ்.வசந்தா,  எஸ்.ரேவதி,  பி.ரங்கநாயகி, எஸ்.சீனிவாசன்,  டி.கோவிந்தராஜன்,  எம்.ராம்குமார்  ஆகியோர்  போட்டி ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT