சேலம்

ஓமலூர் அருகே கிரானைட் கடத்தல் 3 லாரிகள் பறிமுதல்

தினமணி

ஓமலூர் அருகே அனுமதியின்றி கிரானைட் கற்களை ஏற்றி வந்ததாக, 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 ஓமலூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியில் கனிம வளத் துறையின் சிறப்பு வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த 3 லாரிகளில் ரூ.40 லட்சம் மதிப்பிலான கிரானைட் பாறைகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து , லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 இதனிடையே, லாரிகளுக்கு தலா ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அனுமதியில்லாமல் கிரானைட் பாறைகளைக் கொண்டுவரும் தனியார் நிறுவனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT