சேலம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தினமணி

பெரியார் பல்கலைக்கழகம் முன் அனைத்துக் கல்லூரி கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மத்திய அரசை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, பல்கலைக்கழகஆசிரியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் ந.செந்தாமரை தொடங்கி வைத்தார்.
இதில், 7-ஆவது யுஜிசி ஊதிய விகிதங்களை அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய யுஜிசி ஊதிய விகிதங்களை அமல்படுத்த மாநிலங்களுக்கு 100 சதவீத மானியம் வழங்க வேண்டும். யுஜிசி ஊதிய உயர்வு அறிக்கையில் உள்ள குளறுபடிகளை அய்பெக்டோ அமைப்பை அழைத்துப் பேசி களைந்திட வேண்டும். உயர்கல்வி கொள்கை குறித்த விஷயங்களில் அய்பெக்டோ அமைப்பை கலந்து பேச வெண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் வி.கிருஷ்ணகுமார், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் உ.சிவபிரியா, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மண்டலத் தலைவர் ந.பழனிவேலு, மண்டலச் செயலர் ந.ராஜேந்திரன், மண்டலப் பொருளாளர் வெ.பிரபாகர், துணைத் தலைவர் செ.ப.முருகன், இணைச் செயலர் க.சர்மிளா பானு, முன்னாள் மாநிலத் தலைவர் இ.பி.பெருமாள், செயலர் ப.பிரகாஷ் உள்பட பலரும் கலந்துகொண்டு போராட்டத்தின் நோக்கங்கள் குறித்தும், மத்திய அரசை வலியுறுத்தியும் பேசினர்.
இதில் சேலம் மண்டலத்தில் உள்ள அரசு கல்லூரி ஆசிரியர்கள், பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT