சேலம்

சேலத்தில் கைதான இளம்பெண் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பு

தினமணி

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட பெண் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
 நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் குறித்த
 துண்டுப் பிரசுரங்களை அரசு மகளிர் கல்லூரி முன் விநியோகம் செய்ததாக வளர்மதி (23) , ஜெயந்தி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
 இதில் ஜெயந்தி விடுவிக்கப்பட்டார். ஏற்கெனவே, போராட்டம் தொடர்பாக 6 வழக்குகள் உள்ள நிலையில் வளர்மதி சிறையில் அடைக்கப்பட்டார்.
 இந்நிலையில், வளர்மதியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாநகர
 காவல் துறை ஆணையர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில், அவர் சேலம் மகளிர் சிறையில் இருந்து கோவை மகளிர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT