சேலம்

மேட்டூரில் தலை ஆடிக் கொண்டாட்டம்

தினமணி

மேட்டூர் காவிரியில் புதுமணத் தம்பதியர் தலை ஆடியைக் கொண்டாடினர்.
 ஆடி முதல்நாளில் புதுமணத் தம்பதியருக்கு மாமியார் வீட்டில் தலை ஆடி கொண்டாடுவது வழக்கம். திங்கள்கிழமை தலை ஆடிப் பண்டிகை என்பதால், மாமியார் வீட்டுக்கு மருமகன்கள் அழைக்கப்பட்டு, மேட்டூர் காவிரியில் நீராட வைத்து விருந்து வைப்பார்கள். திங்கள்கிழமை மேட்டூர் காவிரியில் ஏராளமான பொதுமக்களும் புதுமணத் தம்பதியரும் நீராடினர்.
 புதுமணத் தம்பதியர் தங்களின் மணமாலைகளை வாழை இலையில் வைத்து, தீபாராதனை காட்டி காவிரி நீரில் விட்டுச் சென்றனர். காவிரியில் நீராட வந்த பொதுமக்கள் அணைக்கட்டு முனியப்பனைத் தரிசித்து அணை பூங்காவுக்குச் சென்று மகிழ்ந்தனர். மேட்டூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் தினகரன் தலைமையில் போலீஸாரும், ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT