சேலம்

ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

DIN

தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக தரம் உயர்த்திட வலியுறுத்தி, பேரூராட்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்திட வேண்டும், பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்துதல் ஆகிய இரண்டு ஆணைகளையும் ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும், கீழ்நிலை பணியாளர்களுக்கு 20 சதவீத பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
பேரூராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரூராட்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், அனைத்து துறையினரும் புதன்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பேரூராட்சி செயல் அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், துப்பரவுப் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில் தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் மாநிலத் தணிக்கையாளர் காலசாமி பேசியது :
பேரூராட்சிகளை தரம் உயர்த்துவது என்ற நோக்கில் நகராட்சியாக உயர்த்தி வரும் நிலையில், ஊராட்சிகளை தரம் உயர்த்தி பேரூராட்சியாக மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பேரூராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது .
பேரூராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு உள்ளது.
மேலும் தங்களின் கோரிக்கை குறித்து அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக சென்னையில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT