சங்ககிரி செல்லியம்மன் கோயிலில் மார்ச் 29-இல் பொங்கல் விழா
சங்ககிரி, சந்தைப்பேட்டை அருள்மிகு செல்லியம்மன், புத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி மார்ச் 29-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது.
சங்ககிரி, சந்தைப்பேட்டை அருள்மிகு செல்லியம்மன், புத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி மார்ச் 29-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது.
சங்ககிரி, சந்தைப்பேட்டை செல்லியம்மன், புத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பூச்சொரிதல், கும்பம் வைத்தல் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா தொடங்கியது. இதையடுத்து தினசரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்களுடன் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
மார்ச் 27-ஆம் தேதி இரவு சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், 28-ஆம் தேதி அக்னி, பூங்கரங்கள் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வருதல், அன்று இரவு முப்பாட்டு தீபம் எடுத்தல், 29-ஆம் தேதி சேத்து முட்டி எடுத்துப் பொங்கல் வைத்தல் வைபம் நடைபெற உள்ளன. 30-ஆம் தேதி பூ அள்ளிக் கிணற்றில் விடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.