முகப்பு
சேலம்

தேமுதிக உள்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக உள்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:17 AM
பகிர்:

சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக உள்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 வாழப்பாடி பேருந்து நிலையம் எதிரிலுள்ள வாழப்பாடியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வாழப்பாடி ஒன்றிய செயலர் டி.ரத்தினக்குமார் தலைமை வகித்தார். நகரச் செயலர் ஆர்.தங்கராஜ் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் கோவிந்தன், மாணிக்கம், வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 சேலம் கிழக்கு மாவட்டச் செயலர், தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ், மாவட்ட தேர்தல் ஆணையர் எஸ்.பாலமுருகன் ஆகியோர், உள்கட்சி தேர்தல் விதிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கமளித்தனர்.
 கூட்டத்தில், மாநில கேப்டன் மன்ற துணைச் செயலர் சுல்தான்பாஷா, கெங்கவல்லி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சுபாரவி மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →