சேலம்

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 5 பேர் மீது வழக்கு

தினமணி

வாழப்பாடியில், பள்ளிகளின் அருகில் புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 வாழப்பாடி போலீஸார் நடத்திய சோதனையில், வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோயில் அருகே அ.சுப்பிரமணி (62), புதுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வெங்கடேஷ்வரன் (52), மேட்டுப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே சேத்துக்குட்டை பாலகிருஷ்ணன் (40), மேட்டுப்பட்டி தொடக்கப் பள்ளி அருகே பாண்டியன் (60), மோகன் (52) ஆகியோர் புகையிலை பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
 இதனையடுத்து, 5 பேர் மீதும், வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமா சங்கர் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT