சேலம்

வீரகனூர் ஸ்ரீராகவேந்திரா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

DIN

வீரகனூர் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக். பள்ளி  10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
கெங்கவல்லி அருகே வீரகனூர் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5 மாணவ, மாணவியர் 490-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
ஸ்ரீராகவேந்திரா மேல்நிலைப்பள்ளியில் கணிதத்தில் 24, அறிவியலில் 18, சமூக அறிவியலில் 26 பேர் என மொத்தம் 68 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மேலும் தமிழில் 3, ஆங்கிலத்தில் 2, கணிதத்தில் 8, அறிவியலில் 12, சமூக அறிவியலில் 48 பேர் என மொத்தம் 73 பேர் நூற்றுக்கு 99 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
இந்த மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களை பள்ளி முதல்வர் செல்வராஜன், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளித் தலைவர் அருள்குமார், செயலர் தங்கவேல், பொருளாளர் முத்தம்மாள், கல்வி ஆலோசகர்கள் பழனிவேல், இளையப்பன், லக்ஷமிநாராயணன் ஆகியோர் பாராட்டி, பரிசு வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT