சேலம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

DIN

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு யூனிட்டுகளும், 600 மெகாவாட் திறன்கொண்ட ஒரு யூனிட்டும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். திங்கள்கிழமை 600 மெகாவாட் திறன்கொண்ட பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. பழுது நீக்கும் பணியில் அனல் மின் நிலையப் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு தினங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல் மின் நிலையப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT