சேலம்

தம்மம்பட்டியில் கொத்தமல்லி கட்டு விலை சரிவு

DIN

தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொத்தமல்லி  உற்பத்தி அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிந்துள்ளது.
தம்மம்பட்டியிலுள்ள காய்கறி மண்டிகளுக்கு கடந்த 20 நாள்களுக்கு முன் ஒரு கொத்தமல்லி கட்டு ரூ.25-க்கு விற்றது, கடந்த ஞாயிறன்று ரூ.10-க்கு விற்றது. காய்கறி மண்டிகளில் முன் 300 கட்டுகள் வந்தன, தற்போது 2,700 கட்டுகள் வருகின்றன. அதனால், மூன்று கட்டுகள் கொத்தமல்லி ரூ.10-க்கு  விற்பனையாயின. இதுகுறித்து மண்டி உரிமையாளர் கதிர்வேல் கூறியது, மழையினால் கொத்தமல்லியை அனைத்து விவசாயிகளும் தங்களது விவசாய நிலங்களில் பயிரிட்டதால் வரத்து அதிகரித்துவிட்டது. இதனால் விலை குறைந்துவிட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT