சேலம்

மது அருந்தும்போது தகராறு: கொலை செய்யப்பட்ட ஐடிஐ ஊழியர் உடலை கண்டறிவதில் சிக்கல்

DIN

சேலத்தில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட ஐடிஐ ஊழியர் உடலைத் தேடிக் கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
சேலம் அய்யந்திருமாளிகையில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் கோபு (35). இவர் கோரிமேட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி சத்யா பிரபா. இத்தம்பதி இடையே குடும்பத் தகராறு காரணமாக விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இதனால் மனைவியைப் பிரிந்து தனது தாயார் கலாவதியுடன் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற கோபு வீடு திரும்பவில்லை. இதையடுத்து  அவரது தாய் கலாவதி ஐ.டி.ஐ.க்குச் சென்று விசாரித்தார். அப்போது அவர் வேலைக்கு செல்லாதது தெரியவந்தது.
இதுதொடர்பாக,  கலாவதி கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வந்தனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில் ஐடிஐ துப்புரவுப் பணியாளர்  செல்வராஜை பிடித்து விசாரித்தனர். இதில் செல்வராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ராஜேந்திரன்,  ஞானசேகரன்,  தனசேகரன் ஆகியோருடன்  சேர்ந்து கோபு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் செல்வராஜ் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து கோபுவை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து செல்வராஜ்,  ராஜேந்திரன், ஞானசேகரன் உள்ளிட்ட மூன்று பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவான தனசேகரனை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதில் கோபுவின் உடலை ஐ.டி.ஐ. வளாகத்தில் புதைத்ததாகவும், எரித்து விட்டதாகவும் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்து வருகின்றனர். இதனால் கொலை செய்யப்பட்ட கோபுவின் உடலைத் தேடிக் கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
தீவிர விசாரணைக்குப் பிறகே கோபுவின் உடல் எரிக்கப்பட்டதா அல்லது புதைக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவரும்.
கொலையாளிகள் கொடுக்கும் தகவலின் பேரிலே அவரது உடலை தேடி கண்டுபிடிக்க முடியும் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT