சேலம்

மேட்டூர் ராஜவாய்க்காலில் நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர் அணையிலிருந்து இடது மற்றும் வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

தினமணி

மேட்டூர் அணையிலிருந்து இடது மற்றும் வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
 சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் முக்கிய பாசன நீராதாரமான மேட்டூர் ராஜவாய்க்கால் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் தேதியில் பாசனத்துக்காக திறக்கப்படுவது வழக்கம். நிகழாண்டில் கடும் வறட்சி நிலவியதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம், எப்போதும் இல்லாத அளவில் 21 அடியாகக் குறைந்ததால் உரிய காலத்தில் வாய்க்காலில் நீர் திறக்கப்படவில்லை.
 இந்த நிலையில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால், அணையின் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 17}ஆம் தேதி மாலை மேட்டூர் அணையிலிருந்து இடது மற்றும் வலது கரை வாய்க்கால்களில் தலா 300 கனஅடி வீதம் மொத்தம் 600 கன அடி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 15 நாள்கள் வாய்க்காலில் நீர் திறக்கப்பட்ட நிலையில், வாய்க்கால் பாசனப் பகுதி விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை தயார் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இருநாள்களுக்கு முன்பாக அணையிலிருந்து வாய்க்கால் பாசனத்துக்கு நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் வாய்க்காலின் அனைத்து பகுதிகளிலும்
 தண்ணீர் வற்றியது. மேலும், கடந்த நான்காண்டுகளாக இப்பகுதியில் போதிய அளவு மழை பொழிவு இல்லாத வறட்சியான சூழல் நிலவி வந்ததால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவாகவே உள்ளது. தொடர்ந்து உழவுப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, எதிர்வரும் நாள்களில் இப்பகுதியில் மழைக்கான வாய்ப்பை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT