முகப்பு
சேலம்

"மடவளி' நாவல் வெளியீட்டு விழா

கவிப்பித்தன் எழுதிய "மடவளி' நாவல் வெளியீட்டு விழா ஆற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:20 PM
பகிர்:

கவிப்பித்தன் எழுதிய "மடவளி' நாவல் வெளியீட்டு விழா ஆற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் முல்லைவாசன் தலைமை வகித்தார். ஆற்காடு வட்டாட்சியர் கே.பி.சிவகுமார், சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் ரத்னா, நூல் வனம் பதிப்பாசிரியர் எம்.வி. மணிகண்டன், மண்டலத் துணை வட்டாட்சியர் சே.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 ஆயுள் காப்பீட்டு கழக வளர்ச்சி அலுவலர் க.பூபாலன் வரவேற்றார். எழுத்தாளர் கமலாலயன் நூல் அறிமுக உரையாற்றினார். நூலாசிரியர் கவிப்பித்தன் ஏற்புரையாற்றினார்.
 வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் நாவலை வெளியீட்டு பேசினார். கேவேளூர் ஊராட்சி முன்னாள் தலைவர் என்.நந்தகுமார் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
 இதில், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இரா.ராஜலட்சுமி, வாலாஜாபேட்டை வட்டாட்சியர்கள் பிரியா ராஜசேகர், கவிஞர் முகில் மற்றும் வருவாய்த் துறையினர், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.