மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 26 கனஅடியாகச் சரிவு
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை 26 கனஅடியாகச் சரிந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை 26 கனஅடியாகச் சரிந்தது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 36.64 அடியாகச் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 10.42 டி.எம்.சி.யாக இருந்தது.