சேலம்

ஓமலூரில் திருநங்கைகள் தினவிழா 

தினமணி

திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு ஓமலூரில் சிறப்பு பல் மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 ஓமலூர் பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் தினவிழா நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து திருநங்கைகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு பல் மருத்துவ முகாம் நடைபெற்றது.
 முகாமில் திருநங்கைகள், குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல் பரிசோதனைகள் செய்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டஸ். மேலும், பல்லில் ஏற்படும் பாதிப்புகள், பல் சொத்தை உட்பட பல்வேறு பல் நோய்கள் குறித்தும் சோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கினர். இதைகஈ தொடர்ந்து ஏழை எளிய திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டஸ். இதில், ஐந்து திருநங்கைகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன. பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட திருநங்கைகள் பேசியதாவது:
 சமுதாயத்தில் தங்களுக்கான உரிமைகளை தடையின்றி வழங்க வேண்டும். பல்வேறு தடைகளையும் தாண்டி திருநங்கைகள் சுயமாக வாழ்க்கையில்முன்னேற்றம் அடைந்து சமுதாயத்தில் சாதனைகள் படைத்து வருகின்றனர். அதனால், அனைவரும் திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து மதிக்க வேண்டும் என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT