தம்மம்பட்டி பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
தம்மம்பட்டி பெருமாள் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி பெருமாள் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி ஸ்ரீஉக்ர கதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி காலையில் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், செங்கமலவள்ளித் தாயார், ராமர், லட்சுமணர், சீதா, அனுமன், கிருஷ்ணர், தன்வந்திரி, ஆண்டாள், சேனை முதல்வர், அஷ்டலட்சுமிகள், ஹயக்ரீவர் ஆகிய சன்னிதிகளில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இரவில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண வைபவம் தம்மம்பட்டி இரவு 7 மணி முதல் நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் சொர்ணமாளிகை பாஸ்கரன், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், கொண்டயம்பள்ளி, கூடமலை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் நான்காயிரம் பேர் திரளாக கலந்துகொண்டனர்.