சேலம்

இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தினமணி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 10) நடைபெறுகிறது.
 இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஒ.செ. ஞானசேகரன் கூறியிருப்பதாவது:
 தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து நடத்தும் தனியார் துறைக்கான வேலைவாய்ப்புக் கூட்டம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
 இதன்மூலம் வேலைக்கு ஆள்கள் தேவைப்படும் தனியார் நிறுவனங்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
 பல்வேறு தகுதியுடைய மனுதாரர்களை ஒரே இடத்தில் சந்திக்க வாய்ப்பு உள்ளதால் கால விரயமின்றி ஆள்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது.
 இக் கூட்டத்தின் மூலம் தனியார் துறையில் பணியில் சேரும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படுவதில்லை. அவர்கள் தொடர்ந்து பதிவை புதுப்பித்து வந்தால் அரசு வேலைக்குப் பதிவுமூப்பு வரும்போது அவர்களது பெயரும் பரிந்துரை செய்யப்படும்.
 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்காடு சாலை கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
 இம் முகாமில் அக்கவுண்டன்ட், விற்பனை பிரிவு பொறியாளர், கணினி இயக்குபவர், ஜவுளித்துறை மேற்பார்வையாளர், விற்பனை பிரதிநிதி, தட்டச்சர், தையலர் பணிக்கு நேர்முக தேர்வுகள் நடைபெறவுள்ளன. மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT