சேலம்

எடப்பாடி பகுதியில் பலத்த மழை: திருவிழா நிகழ்ச்சிகள் பாதிப்பு

தினமணி

எடப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை கொட்டியது. இதனால் கோயில் திருவிழா நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டன.
 எடப்பாடி பகுதியில் பகல் நேரங்களில் வெப்பக்காற்று வீசிய நிலையில் மாலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்தது. பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, மொரப்பட்டி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது.
 இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை ஓட்டினர். நகரின் பல்வேறு பகுதிகளில் திருவிழா நடைபெற்று வந்த நிலையில், திடீர் மழையால் திருவிழா நிகழ்ச்சிகள் பாதிப்பிற்குள்ளாகின. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. நீண்ட நாள்களுக்கு பிறகு பெய்த இம்மழையால், சுற்றுவட்டாரப் பகுதிளில் குளிர்ச்சியான சூழல் உருவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT