சேலம்

கதிர்செட்டிப்பட்டியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

DIN


ஓமலூர் அருகே கதிர் செட்டிப்பட்டி கதிர்பெருமாள் கோயிலுக்கு செல்ல ரூ.12 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணியை சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜி.வெங்கடாசலம் சனிக்கிழமை துவக்கி வைத்தார்.
ஓமலூர் அருகேயுள்ள கதிர்செட்டிப்பட்டி பகுதியில் சுமார் ஐநூறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தக் கிராமத்தில் உள்ள மலையில் நூற்றாண்டுகள் பழமையான கதிர்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்தக் கோயிலுக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடாசலம் கோயிலுக்கு செல்லும் மண்பாதையை தார்ச்சாலையாக மாற்ற அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனைத் தொடர்ந்து தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நீண்டகால கோரிக்கையான புதிய தார்ச் சாலைப்பணியை நிறைவேற்றிக்கொடுத்த வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வுக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT