சேலம்

ஆத்தூர் டிஎஸ்பி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு

DIN

ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள் மீது 24 மணி நேரத்தில் வழக்குப் பதிவு செய்ய ஆத்தூர் குற்றவியல் நீதிமன்ற எண். 1 மாஜிஸ்திரேட் சிவக்குமார் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் வழக்குரைஞர் த. சுரேஷ் மீது பொய் வழக்கு போட்டு தாக்கிய புகாரில் வழக்குரைஞர் சுரேஷ் ஆத்தூர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்ததாகத் தெரிகிறது. வழக்கை விசாரித்த ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 மாஜிஸ்திரேட் சிவக்குமார் ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பொன் கார்த்திக்குமார், ஆத்தூர் நகரக் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ஏ. அமிர்தலிங்கம், இதே காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலர் செல்வராஜ், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் செந்தில் ஆகியோர் மீது 24 மணி நேரத்தில் வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க நடவடிக்கைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

SCROLL FOR NEXT