சேலம்

குடிநீர் கோரி சாலை மறியல்: 11 பேர் கைது

DIN

மேட்டூர் அருகே குடிநீர் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேட்டூர் அருகே மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில்  உள்ளது வெள்ளப்பம்பட்டி கிராமம். கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த கிராம மக்கள் சீரான குடிநீர் விநியோகிக்கக் கோரி மேச்சேரி-தொப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து பொதுமக்கள் கடும் இன்னலுக்குள்ளானார்கள். இச்சம்பவம் தொடர்பாக, மேச்சேரி போலீஸார் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தனர். இவர்களுக்கு மேட்டூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்திரவிட்டது.
இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11பேர் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 
இவர்களை நீதித்துறை நடுவர் கன்னிகா தேவி காவல் படுத்த உத்திரவிட்டார். மேச்சேரி போலீஸார் கணேசன், பெரியசாமி, ராமச்சந்திரன் பெருமாள் உள்ளிட்ட 11 பேரை சேலம் மத்திய சிறையிலடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT