சேலம்

மரவள்ளிக் கிழங்கு விலை, விற்பனை: பிப்.16-இல் முத்தரப்புக் கூட்டம்

DIN

சேலம் மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு விலை மற்றும் விற்பனை குறித்து கலந்தாலோசிக்கும் முத்தரப்புக் கூட்டம், வரும் பிப். 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு விலை மற்றும் விற்பனை குறித்து கலந்தாலோசிக்கும் முத்தரப்புக் கூட்டம், வரும் பிப். 16 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
சேலம் மாவட்ட ஆட்சியரக (இரண்டாம் தள) கூட்ட அரங்கில் நடைபெற உள்ள கூட்டத்தில் அரசுத் துறை அலுவலர்கள், ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆலோசிக்க உள்ளனர்.
எனவே, இக்கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT