இளம்பெண்ணிடம் தங்க நகை மோசடி
மேட்டூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலீஸ் போடுவதாகக் கூறி 4 பவுன் தங்க நகையை மோசடி செய்த இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேட்டூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலீஸ் போடுவதாகக் கூறி 4 பவுன் தங்க நகையை மோசடி செய்த இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேட்டூர் அருகே உள்ள தொட்டில் பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (35). அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாப்பாத்தி (25), செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் இருவர் வெண்கல பாத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு பாலீஸ் போடுவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து பாப்பாத்தி தனது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பாலீஸ் போடுவதற்காக கொடுத்தார். இதையடுத்து பாலீஸ் போடுவதற்காக வெந்நீர் எடுத்து வருவதற்காக பாப்பாத்தி வீட்டுக்குள் சென்றார். அப்போது, 4 பவுன் தங்க நகையுடன் இருவரும் ஓடிவிட்டனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் கருமலைக்கூடல் போலீசில் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.