முகப்பு
சேலம்

உணவுப் பாதுகாப்பு அலுவலரை சிறைபிடித்ததாக 46 பேர் மீது வழக்கு

ஆத்தூரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலரை சிறைபிடித்ததாக 46 பேர் மீது ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Updated On : 9 ஜூலை, 2018 at 9:19 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ஆத்தூரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலரை சிறைபிடித்ததாக 46 பேர் மீது ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டையில் புதன்கிழமை இரவு மரவள்ளிக்கிழங்கு ஆலையில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் ஆய்வு மேற்கொண்டார்.  அவரை ஆலை உரிமையாளர்கள் ராஜா சிறைபிடித்தார். மேலும் ஆத்தூர் வட்ட சேகோ மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.துரைசாமி,செயலாளர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் அலுவலர்களை சிறைபிடித்ததாக ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் சரவணன் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நலச் சங்க  நிர்வாகிகள் என 46 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.