முகப்பு
சேலம்

சமூக பணியாளர்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

அனைத்துத் துறைகளிலும் சேவையாற்றும் சிறந்த சமூகப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பத்ம  விருதுகளுக்கு ஜூலை 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜூலை, 2018 at 9:20 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

அனைத்துத் துறைகளிலும் சேவையாற்றும் சிறந்த சமூகப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பத்ம  விருதுகளுக்கு ஜூலை 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது பத்ம விருது வழங்கும் பொருட்டு,  கலை,  இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சிவில், சேவை,  வர்த்தகம் மற்றும் தொழில்  போன்ற அனைத்து துறைகளிலும்  சாதனைகள், சேவைகள் புரிந்தவர்களுக்காக மத்திய அரசு மூலம்  "பத்ம விருது' வழங்கப்படுகிறது.  இந்த விருதுக்கு இனம், வேலை, நிலை அல்லது பாலினம் ஆகியவற்றின் வேறுபாடு இல்லாமல் அனைத்து நபர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.      
மேலும், இவ்விருதுகள் தொடர்பான விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ள  w‌w‌w.‌p​a‌d‌m​a​a‌w​a‌r‌d‌s.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதள முகவரியை பார்க்கவும். அதன்படி உரிய கருத்துரு இரண்டு நகல்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு ஜூலை 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
இதுகுறித்து மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்.126, சேலம் என்ற முகவரி மற்றும் 0427 - 2413213 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.