சேலம்

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

தினமணி

நரசிங்கபுரத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜமாபந்தியில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தனர்.
 சேலம் மாவட்டம், நரசிங்கபுரத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்தக் கடை நெடுஞ்சாலையில் உள்ளதாக நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டது. இந்நிலையில் தற்சமயம் மீண்டும் டாஸ்மாக் கடை அமைத்துள்ளதால், அப்பகுதி மக்கள் மிகவும் அதிருப்தியடைந்தனர்.
 இந்நிலையில் ஆத்தூரில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில், ஜமாபந்தி அலுவரான டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கத்திடம் நரசிங்கபுரத்தில் டாஸ்மாக் கடை வேண்டாம் என புகார் கொடுத்தனர்.
 மேலும், நரசிங்கபுரத்தில் உள்ள இடிஅமீன் ஏரியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர், இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT