சேலம்

டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினமணி

அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொமுச, சிஐடியு, பாட்டாளி தொழிற்சங்கம், விடுதலைச் சிறுத்தைகள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ஜம்பு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை காலமுறை அடிப்படையில் அரசு ஊழியராக்க வேண்டும். கல்வித்தகுதி, பணி மூப்பு அடிப்படையில் அரசு துறைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களில் நிரப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
 மேலும், கடை ஊழியர்களை மிரட்டி தாக்குதல் நடத்தும் பார் உரிமையாளர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடும் பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
 இது தொடர்பாக, டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகி ஜம்பு கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். உடனடியாக அரசு ஊழியர்களுக்கான இணையான ஊதியம் வழங்கவில்லையெனில், வரும் ஜூன் 28-ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
 அடுத்தக்கட்டமாக வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT