சேலம்

நங்கவள்ளியில் டிப்பர் லாரியுடன் அரசுப் பேருந்து மோதல்: 4 பேர் காயம்

DIN

நங்கவள்ளி அருகே டிப்பர் லாரியும், அரசு நகரப் பேருந்தும் நேருக்குநேர் மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த நால்வர் காயமடைந்தனர்.
மேச்சேரியிலிருந்து அரசுப் பேருந்து திங்கள்கிழமை மாலை மேட்டூர் நோக்கி சென்றது. ஊஞ்சப்பட்டி என்ற இடத்தில் சென்ற போது, எதிரே அதிவேகமாக செம்மண் பாரம் ஏற்றி வந்த டிப்பார் லாரி அரசுப் பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த மலையடிப்பட்டியைச் சேர்ந்த நந்தகுமார் மனைவி சரஸ்வதி (35), அமிர்தலிங்கம் மனைவி நீலா (50), கிருஷ்ணன் மனைவி ஆனந்தி (60), தெத்திகிரிபட்டியைச் சேர்ந்த கூத்தகவுண்டர் மகள் தாரணி (9) ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக டிப்பர் லாரி ஓட்டுநர் வீரக்கல்லை சேர்ந்த கோபிநாத் (35) மீது நங்கவள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT