சேலம்

அரசு, தனியார் பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு

DIN

சேலம் மாவட்டத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குரு வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இதுபற்றி தகவல் வெளியான நிலையில் சேலம் மேச்சேரி மற்றும் ஆத்தூரில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது கல்வீசியதில் கண்ணாடி உடைக்கப்பட்டது.
சேலம் நகரில் இரண்டு அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடி சேதமடைந்தன. இதனிடையே கண்ணாடியை சேதப்படுத்திய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடி சேதமடைந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.
ஓமலூரில்..
ஓமலூரில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யபட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கைதை கண்டித்து ஆங்காங்கே பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டு எதிர்ப்பை வெளிபடுத்தி வருகின்றனர். இந்தநிலையில் சனிக்கிழமை சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கிசென்ற அரசுப் பேருந்து குதிரைக் குத்திப்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கினர்.
இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. தீவட்டிப்பட்டி போலீஸார் சென்று விசாரணை நடத்தி கொண்டிருந்த போதே,சற்று தூரத்தில், திருச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று அரசு விரைவுப் பேருந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் கல் வீசி தாக்கினர்.
இதை பார்த்த போலீஸார் மர்ம நபர்களை துரத்தி சென்றனர். பின்பு போலீஸார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT